பிப்ரவரி 2011 இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த இந்த அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வில் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்ததாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதுவது அவரவர் விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததாக எண்ணினால் அவர்களும் தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வு ஆன்லைனில் 3 மணி நேரம் நடைபெறும். பழைய வினாத்தாள் முறையிலேயே தேர்வு இருக்கும். தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.