Categories
தேசிய செய்திகள்

அண்ணா மாணியின் 104-வது பிறந்தநாள்…. சிறப்பாக கொண்டாடும் கூகுள்….!!!

அண்ணா மாணியின் பிறந்த நாளை கூகுல் கொண்டாடுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பகுதியில் கடந்த 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் அண்ணா மாணி பிறந்தார். இவர் ஒரு சிறந்த இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஓசோன் அளவீடுகள், காற்றின் ஆற்றல், சூரியன் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்தி எண்ணற்ற அளவீடுகளை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அண்ணாமாணி கடந்த 1939-ம் ஆண்டு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் பிரிவுகளில் இளநிலை அறிவியலில் கௌரவ பட்டம் பெற்றுள்ளார். இவர் சோலார் ரேடியேஷன் ஓவர் இந்தியா, தி ஹேண்ட் புக் ஃபார் சோலார் ரேடியேஷன் டேட்டா பார் இந்தியா ஆகிய 2 புத்தகங்களை எழுதியுள்ளார். இவருக்கு இன்று 104-வது பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளை கூகுள் நிறுவனம் சிறப்பாக கொண்டாடுகிறது.

Categories

Tech |