சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்றார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. மேலும் திட்டங்களுக்கான பெயர் சூட்டும் விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதன்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் திமுக தாங்கள் தான் காரணம் என தெரிவிக்கின்றனர்.
மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அதிமுக இன்றுவரை திமுக அதற்காக குரல் கொடுக்கவில்லை. ஒற்றை தலைமையுடன் வலுமிக்க இயக்கமாக அதிமுக தோன்றுகிறது. ஆனால் ஓபிஎஸ் பண்ருட்டியா உட்பட யாரை வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்ளலாம். இதனால் எந்த பயனும் இல்லை எதுவும் நடக்க போறது இல்லை. ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக கூறுவது தவறு. மேலும் சசிகலாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம் சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா. கட்சிக்கும் ஓபிஎஸ் சம்பந்தமில்லை அதனால் அதிமுக அலுவலகத்தில் பன்னீர்செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என அவர் தெரிவித்துள்ளார்.