ரசிகர்கள் தனுஷிடம் ஐஸ்வர்யா செய்துவிட்டார் ஏன் உங்களால் மட்டும் இத செய்ய முடியவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியே சமூகவலைதளத்தில் அறிவித்தனர். இவர்களின் பிரிவை அறிந்த குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பிறகு இருவரும் இணையதளத்தின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நிலையில் ஐஸ்வர்யா கொரோனா பாசிட்டிவான போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு ஆக்டிவாக ஐஸ்வர்யா செயல்பட்டு வருகின்றார். ஆனால் தனுஷ் இதுவரை இணையதளபக்கத்தில் தலைகாட்டவில்லை. ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம் என்று சொல்வார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவே இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் போது நீங்கள் மட்டும் ஏன் இணையதளபக்கம் தலைக்காட்டாமல் இருக்கிறீர்கள் என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரிவு செய்திக்குப் பிறகு “நானே வருவேன்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் தனுஷ் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு இணையதள பக்கம் தனுஷ் வரவில்லை. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படமானது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஏன் தனுஷின் திரைப்படங்களை மட்டும் இணையத்தில் வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.