அண்ணியையும் அவரது கள்ளகாதலனையும் கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் மரியா. இவரது கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மாமனார் மற்றும் கொழுந்தனாரோடு வசித்து வந்தார். இந்நிலையில் மரியாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான ஹர்பக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மரியாவின் மாமனார் மற்றும் கொழுந்தன் விகாஸ் இதனை கண்டித்தனர். மரியாவின் கொழுந்தனார் ஹர்பக்கிடம் இந்த பழக்கத்தை விட்டுவிடுமாறு மிரட்டியுள்ளார். எனவே மரியாவும் ஹர்பக்கும் குஜராத்திற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து அவர்கள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் குஜராத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அவர்களது ஊருக்கே அழைத்து வரப்பட்டனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் மரியாவின் மீது மாமனாருக்கும் கொழுந்தனுக்கும் கோபம் இருந்ததால் மரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது விகாஸ் டிராக்டர் ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார். இதில் காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் ஹர்பக் மனைவி மரியாவின் கொழுந்தனார் விகாஸ் மீது புகார் கொடுத்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.