Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணியை கத்தியால் குத்தி கொன்ற கொழுந்தன்….. என்ன காரணமாக இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உலககெங்கிலும் தற்போது சொத்து விவகாரம் பெரும் பிரச்சனையாகி வருகிறது. அண்ணன், தம்பி சொத்துகளை பிரித்துக் கொள்வதில் சண்டை போட்டு ஒருவருக்கொருவர் குத்தி கொலை செய்து வருகிறார்கள். சொத்துக்கள் விவகாரம் குறித்து போலீஸ் நிலையத்தில் அதிகமாக புகார்கள் எழுகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட திட்டக்குடியில் உள்ள ராமநத்தம் அருகில் உள்ள கல்லூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பட்டத்தாள். இவர்களுக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் வெங்கடேசனும்(38) செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டார்.  இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் வெங்கடேசன் தம்பியான காசிநாதன் அங்கு வந்தார். திடீரென அவர் கத்தியால் பிரேமலதாவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், கூச்சலிட்டார். இவர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரேமலதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்ததும் ராமநத்தம் போலீசார் பிரேமலதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ராமநத்தம் போலீசார் நிலையத்தில் காசிநாதன் சரணடைந்தார். இதனையடுத்து சொத்து பிரச்சனைக்காக அண்ணியை கொலை செய்தாரா? அல்லது எதற்காக பிரேமலதாவை காசிநாதன் கொலை செய்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |