மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஜவார் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் 3 பழங்குடியின சகோதரிகள் சில நாட்களுக்கு முன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மூன்று பேரில் மூத்த சகோதரி சோனு கல்லூரி மாணவி, 2 வது சகோதரி சாவித்திரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ட 3 வது சகோதரி அனிதா படிப்பை கைவிட்டு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களின் தந்தை ஜான்சிங் சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இது சம்வபம்குறித்து கந்த்வா போலிஸ் சூப்பிரண்டு விவேக் சிங் கூறியது, சகோதரர்களுக்கு பாலில் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கல்லூரியில் படித்த மூத்த சகோதரியின் சக மாணவிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி அடுத்தகட்ட விசாரணையில் வேறு சில தகவல்கள் போலீசருக்கு கிடைத்துள்ளது. அதாவது, மூத்த சகோதரியின் மொபைல் போனில் அவர்கள் பேசிய பேச்சுக்கள் பதிவாகியுள்ளது. அதில், வீட்டில் இருந்த கோதுமை எடுத்து பயன்படுத்த அவர்களது அண்ணி தடுத்து உள்ளார். இதனை பற்றி அவர்கள் சகோதரர் எதுவும் கூறாமல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல 2 சகோதரிகளுக்கு தனது திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்று தெரிவித்துள்ளனர். 3 சகோதரிகளும் அவர்களது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளனர். ஆனால் சமீபத்தில் அவர் மறைந்து விட்டார். இதனால் அவர்களின் வேதனை அதிகரித்து உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.