பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று அதகலமாக இருந்தது. அசிம் மற்றும் மகேஸ்வரி சண்டை கட்டி நின்றனர். அதன் பிறகு வெளியான இரண்டாவது புரோமோவில் குயின்சிக்கும், ஜனனிக்கும் சண்டை வெடித்துள்ளது. இதில் குயின்ஷி டவலை ஜனனி பயன்படுத்தியதால் ஜனனி குயின்சியின் காலில் விழுந்து பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோவில் ராமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதாவது டிஆர்பி டாஸ்க்கிலிருந்து ஒரு வொர்ஸ்ட் பர்பாமரை கூறுமாறு சொல்கிறார் பிக் பாஸ். இதில் மகேஸ்வரி பெயரை அசிம் சொல்கிறார்.
ஏடிகே தனலட்சுமி பெயரை சொல்கிறார் வேலை செய்யாமல் இருக்க கண்ணில் அடிபட்டதை சொல்வதாக தெரிவித்தார் தன லெட்சுமி. இதனால் கடுப்பான ரான் இப்படி எல்லாம் சொன்னால் என்னால் சும்மா இருக்க முடியாது. ஒழுங்கான காரணத்தை மட்டும் சொல் என்று கோபத்தில் எகிர்கிறார்.