பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர்த்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் வெடி வைப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்