Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அதனை மீட்க முடியவில்லை” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியில் கூலித்தொழிலாளியான சரவணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சரவணன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் செலவுக்காக சௌந்தர்யாவின் நகைகளை அடமானம் வைத்துள்ளார்.

இதனை அடுத்து அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்ட சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சரவணனின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |