Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது ‌. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘குருதி ஆட்டம்’ . இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா , ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கும் 11ஆம் தேதி டீசரும் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |