அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here's #RangaRattinam from #KuruthiAattam ❤️
Sending in some love for the new month with this energetic number..
Link – https://t.co/FxMTGzDLCO@Rockfortent @Atharvaamurali @sri_sriganesh89 @priya_Bshankar @FiveStarAudioIn @kbsriram16 @DoneChannel1 @APVMaran pic.twitter.com/PwGJFl8Xo5
— Raja yuvan (@thisisysr) July 1, 2021
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘ரங்க ராட்டினம்’ என்கிற இந்த கலகலப்பான பாடல் வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.