Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக்… தெறிக்கவிடும் டீசர்…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதையடுத்து இவர் சண்டிவீரன், ஈட்டி, பரதேசி, இமைக்கா நொடிகள், கணிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 100, பூமராங் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது .

இந்நிலையில் அதர்வா நடிப்பில் உருவாகிவரும் அட்ரஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் ராஜமோகன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |