அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பாவாணி சங்கர் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘குருதி ஆட்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி ‘குருதி ஆட்டம்’ திரைப்பட வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமான அறிவித்து படக்குழு சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 28ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.