கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன்(27). இவர் மருந்தகம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் முடிந்ததிலிருந்து இவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக ராஜேந்திர மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியிடம் 12 மணி வரை ராஜேந்திரன் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் தனித்தனியாக அறையில் சென்று படுத்துள்ளனர். அப்போது மிகுந்த மனவேதனையில் இருந்த ராஜேந்திரன் இரவு 12 மணியளவில் வீட்டு படுக்கையறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து காலை எழுந்து வந்து பார்த்த மனைவி தன்னுடைய கணவன் அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜேந்திரன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது .அதில் அவர் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளதால் தொடர் விசாரணைக்கு பிறகே இதுகுறித்து முழு விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.