Categories
சினிமா

அதற்குள் வசூலை அள்ளிக்குவித்த “பீஸ்ட்”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!!!

நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பின் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் ஆகும். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி நாளை வெளியாகவுள்ளது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதற்கிடையில் “பீஸ்ட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்க திரையரங்கும் ரிலீஸ் உரிமத்தை வலிமை ஆகிய பல படங்களின் அமெரிக்க வினியோகஸ்தர்களான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கிறது. இப்போது பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுதும் தொடங்கி உள்ள நிலையில் அமெரிக்காவில் ஒருநாள் முன் ஏப்ரல் 12 (இன்று) மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்ரல்13 அதிகாலை 5 மணி அளவில்) முதல் காட்சி திரையிடப்படுகிறது.
இதற்குரிய டிக்கெட் விலை 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும். அத்துடன் இந்த படம் அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டாலர்களை கடந்து உள்ளது. இந்தியமதிப்பில் 2,65,74,138.05 கோடி ரூபாய் ஆகும். ரிலீஸுக்கு முன்பாகவே பீஸ்ட் படம் வசூலை அள்ளிக்குவித்ததை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |