தமிழ் சினிமாவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெருமை சேர்த்து வருகிறார் கமல்ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அயராது பாடுபட்டு வருகிறார். இருந்த போதிலும் கடந்த நான்கு வருடங்களாக கமலின் படம் வெளியாகாதது அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வருத்தத்தைப் போக்கி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாக உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் கமலுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்றோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் திரைப்பட பாடல் வெளியாக இருக்கின்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அனிருத்தின் இசையில் கமல் எழுதி பாடியிருக்கும் பத்தல பத்தல பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சில சர்ச்சைகளில் சிக்கியது.
அதாவது இந்த படத்தில் ஒரு இடத்தில் ஒன்றியத்தின் தப்பால ஒன்னியும் இல்ல இப்பால என்று ஒரு வரி இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்றியம் என கமல் மத்திய அரசை தான் சாடி எழுதி இருக்கின்றார் என சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கமல் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, பத்திரிகையாளர் ஒன்று கூடினால் அதற்கு பெயர் ஒன்றியம். அதுபோல தயாரிப்பாளர்கள் ஒன்று கூடினால் அதற்கு பெயர் ஒன்றியம். அதாவது ஒன்று கூடுவதற்கு பெயரை ஒன்றியம் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக இந்த சர்ச்சை ஒய்ந்து விடும் என எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.