Categories
அரசியல் மாநில செய்திகள்

அதற்கு இதுவே சாட்சி…! நா ரெடி…! நீங்க அதுக்கு ரெடியா…? சவால் விட்ட செல்லூர் ராஜு…!!!!!

இபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் வரும்29ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.

எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள விருதுகளை சாட்சியாக இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில கூட்டுறவு துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டு வருகிறார். அவர் தன்னுடைய குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். அதுபோல அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்து விட்டார் என்றால் அவர் அரசியலில் இருந்து விலக தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்

Categories

Tech |