அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை நிறுத்தக் கோரி வாசுகி பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்ஜிஆர் இவர்களைத் தொடர்ந்து ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி முதலிய கம்போ தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து போட்டி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுதான் வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இணையத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நேரில் மோதுவதோடு இணையத்திலும் தாறுமாறாக மோதி வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தரப்பினரிடையே இணையத்தில் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர். இதனை பிரபலங்கள் யாராவது கண்டிக்கும் வகையில் ஏதாவது சொன்னால் அவர்களையும் திட்டி தீர்க்கின்றனர். இந்நிலையில் இதை நிறுத்தும்படி பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கூறியுள்ளதாவது, தயவு செய்து இந்த சண்டையை நிறுத்த அஜித் மற்றும் விஜய் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். உங்கள் பெயர்களை தவறாக சித்தரித்து பேசி வரும் ரசிகர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அன்பு என்ற பெயரில் ரசிகர்கள் மோதலில் ஈடுபடுவது உடனடியாக நிறுத்துவதற்கு நீங்கள் இருவரும் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக” அவர் கூறியுள்ளார்.