Categories
உலக செய்திகள்

அதற்கு வாய்ப்பே இல்லை…. “ஓய் கிராஸ்ஓவர்” கார்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுமா?…. எலான் மஸ்க் திட்டவட்டம்….!!!!

டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை  எலான் மஸ்க்  மறுத்துள்ளார்.

சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள்  மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை  உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

மேலும் டெஸ்லாவின்  மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் ஒய் கிராஸ் ஓவர் கார்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும்  என தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை நிறுவனத்தின்  சிஇஓ எலான் மஸ்க்  மறுத்துள்ளார்.

Categories

Tech |