Categories
மாநில செய்திகள்

அதற்கு OK சொன்ன ஜெயலலிதா…. ஆனால் நடந்தது என்னவோ வேறு…. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி ரெட்டி, பிரதாப் ரெட்டி டாக்டர் பாபு ஆபிரகாம் மற்றும் ராமமோகன் ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன்படி இந்த எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்திருந்தால் அவரின் உயிரை காப்பாற்று இருக்கலாம் என தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க மருத்துவர் சமீம் சர்மா பரிந்துரைத்த ஆஞ்சியோ அறுவை சிகிச்சைக்கு ஜெயலலிதா சமாதித்தார் என ஆறுமுகசாமி ஆணையா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பின்னும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பிலேவை அப்பல்லோ அழைத்தது ஏன் என்று ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு என ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |