உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசு சாரா அமைப்பு நடப்பாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்யும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசுசாரா அமைப்பு வருடந்தோறும் 100 மதிப்பெண்களின் அடிப்படையில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் 100 மதிப்பெண்களிலிருந்து படிப்படியாக குறையும் நாடுகள் ஊழல் நிறைந்த நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா ஊழல் ரீதியாக 40 மதிப்பெண்களை பெற்று கடந்தாண்டில் 85 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் 28 மதிப்பெண்களை பெற்று 140 ஆவது இடத்திலுள்ளது. இதனையடுத்து டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் ஊழல்கள் மிகவும் குறைவாக இருக்கும் பட்டியலில் 80 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 11 மதிப்பெண்களைப் பெற்று தெற்கு சூடான் உலகிலேயே அதிகளவில் லஞ்சம் நிலவும் பட்டியலில் முதலிடத்திலுள்ளது.