திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள்அதிகமாகி வருகின்றது. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை அப்புறப்படுத்த கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நகரமைப்பு அலுவலர் இந்திரா தலைமையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகள், படிகட்டுகள், கூரைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொடுத்தனர். பின்னர் மீண்டும் இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துனர்.