Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும்” கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

 கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதிக்கு அருகில் உள்ள சிங்கவனத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சிங்க வனத்தை சுற்றியுள்ள நிலையூர், திணையாகுடி, காரைக்கோட்டை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களை இங்கு வந்துதான் விற்பனை செய்கின்றனர்.  இந்த கொள்முதல் நிலையத்தில் குறைந்த அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

சுமார்  200 ஏக்கருக்கும் மேல் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் நெல்லை   அறுவடை செய்கின்றனர். எனவே  கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்  நிலையத்தை என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம்  நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |