வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் பூஞ்செடி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து அக்கம்பக்கத்தினரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.