டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாண்டியராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.