கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது
உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி மருந்தை வாங்குவதற்கு கையொப்பமிட்டுள்ளது. இந்த மருந்து மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் மக்சிம் ஸ்டெபநோவ், ஹைதராபாத் பயோடெக் நிறுவனத்திடம் சென்று தடுப்பூசி பற்றி விசாரித்துள்ளார்.