Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா வட்டி தருவோம்…. 40 கோடி வரை மோசடி…. போலீஸ் விசாரணையில் சிக்கிய நால்வர்…!!

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் இடத்தில் சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டு மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாமாதம் வட்டி திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் பணம் செலுத்தியவர்கள் திரும்ப பெற முடியாத நிலைக்கு ஆளானார்கள்.

எனவே இதுதொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில் ரூபாய் 40 கோடி வரை 550 பேரிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பணிபுரிந்த 8 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் ஒரு தம்பதியினரும் அதில் கணக்கராக வேலை பார்த்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜமாலுதீன் என்பவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நான்கு பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |