உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிறு அன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாயின் அன்பை போல அதிகம் பேசப்படாத தந்தையின் பாசம் பிள்ளைகளின் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர தன்னலமற்று ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குடும்பத்தின் சுமைகளை சுமப்பது மட்டுமின்றி குழந்தைகளை வழி நடத்தும் நண்பனாகவும் ஆசானாகவும் விளங்குபவர் தந்தை.
இந்நிலையில் இந்த அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சியடைய செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் சிக்னல் கிடைக்காததால் சாலையில் மரத்தடியில் அமர்ந்து படித்த போது மழை பெய்யத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்த மாணவியின் தந்தை குடையை எடுத்து வந்து மகளின் படிப்பு பாதிக்காமல் இருக்கவும், மழையில் நனையாமல் இருக்கவும் குடை பிடித்தபடி நீண்ட நேரம் நின்றுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த சிலர் அதிகம் பேசப்படாத அப்பாவின் அன்பில் தான் குழந்தைகளின் சிறந்த வாழ்க்கை அமைகிறது என்று தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.