மெக்சிகோவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்ததை விட அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் பல்வேறு நாடுகள் அதிக அளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,82,301 என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,94,287 என்று தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையானது அரசு அறிவித்தை விட 61.4% அதிகமாக உள்ளது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 4,17,002 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மெக்சிகோ நாட்டில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைத்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.