அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேற்று 647 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 709 பேர் தற்போது சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் அம்மாவட்டத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.