Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. இனி தமிழக மக்களுக்கு இது இலவசம்?…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்ற 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் 844 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும், திருவள்ளூரில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 34,98,992 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை தவிர்ப்பதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டார். இந்நிலையில் அமைச்சர் பேசியதாவது “நேற்று மட்டும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. அத்துடன் அந்த மாவட்டத்தில் 95 % பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதனபின் தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் 10 தினங்களில் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை கொண்டுவருவோம்” என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பொருளாதாரம் முடங்காமல் இருப்பதற்கு தொழிலாளர்களுக்கு நிறுவன முதலாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வழிவகை செய்து கொள்ளுங்கள். அத்துடன் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இப்போதைய சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Categories

Tech |