நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் ஓணம் பண்டிகை வர உள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அறிவுறுத்தியுள்ளார்.