செங்கல்பட்டு மாவட்டத்தில் சோதனையின் மூலம் ஒரே நாளில் 149 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 149 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 ஆயிரத்து 904 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.