Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை பரவுமென தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில் ஐஐடி வளாகத்தில் பணிபுரியும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று அதிகமாகி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ள 12 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் கட்டிடப் பணிகளுக்காக வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. எனவே மே 8-ஆம் தேதி பல்வேறு இடங்களில் 1 லட்சம் தடுப்பூசி முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |