Categories
உலக செய்திகள் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் முழு ஊரடங்கு…. பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில்  மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை மூன்று வாரங்களுக்கு செயல்படாது என்றும் 10 கிலோ மீட்டருக்கு அதிகமாக பயணம் செய்ய அனுமதிச் சீட்டு கட்டாயம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேக்ரான் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அதை போட்டுக்கொள்வது   தான் சிறந்த தீர்வாக இருக்கும் என்றும்  கூறினார். மேலும் ஏப்ரல் 16ம் தேதியிலிருந்து 60 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசிகள் போடப்படும் என்றும் மே 5 ஆம் தேதியிலிருந்து 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து ஏப்ரல் 26 தேதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படும் என்றும் மே 15ஆம் தேதிக்கு மேல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |