லண்டன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதனை கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனோ பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால் டயர் 3 என்று சொல்லப்படும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவகங்கள் மற்றும் சேவைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இம்மூன்று அடுக்கு கட்டுப்பாட்டின் படி மக்கள் வெளியே செல்லவும், பிற இடங்களில் சந்திக்கவும் தடை விதிக்கப்படுகிறது .
மேலும் இந்த நகரில் ஏறக்குறைய 19 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லண்டன் மேயர் கூறியதாவது:- கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடிவிட்டு ஜனவரியில் மீண்டும் துவங்கலாம். இதனை அரசு பரிசீலினை செய்ய வேண்டும் என்றார். மேலும் லண்டனில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று மற்றும் இன்று முதல் முன்னுரிமை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.