தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் ஆகியவற்றுக்கான தேவை உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.