குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா பரவலை கட்டுபடுத்த 57 மணிநேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனிடையே குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அஹமதாபாத் மாநகராட்சி முழுவதும் 57 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.