Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை  மாநிலம் முழுதும் 8,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் கூறியுள்ளார். அதன்பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |