Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. அரசு ஷாக்கிங் அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அதிகரித்து வருவது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க ரயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |