சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 87 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது 16 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை 298 ஆக உள்ளது.