சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தைக் கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 29 பேர் தோற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏற்கனவே சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 21 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன்றார்கள்.