சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 149 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1452 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து தொற்றினால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து விட்டார்.