காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் லோயர்கேம்ப் பகுதியில் வசிக்கும் சரவணன், விஜய், முத்தையா, ஜெயக்குமார், கல்யாணி, கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து சூதாட்டத்தில் பயன்படுத்திய பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.