சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது கீரனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த 150 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர்.