Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் சிறார் குற்றச்சம்பவங்கள்…. அதிரடி திட்டம் போட்ட போலீஸ்…!!!

தமிழ்நாடு சென்னை மாநகர காவல்துறை மற்றும் சர்வதேச நீதி இயக்கம் சார்பில் குழந்தைகள் உரிமை ஊக்குவிப்பு  மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு தொடர்பான  கருத்தரங்கமானது, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கு  அதிகப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்பில் உள்ள குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், குற்ற சம்பவங்களில் 18 வயதுக்கும்  குறைவான சிறார் சிக்கியுள்ளது அதிகரித்து வருகிறது. மேலும் அதனை தடுக்கும் நடவடிக்கையாக 51 கிளப்புகள் புதிதாக தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |