தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் 3,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு. சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்டகாய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.