புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பதுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் குணமடைந்து விடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 770 ஆக உள்ளது.