திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 நபர்கள் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 392 ஆக இருக்கின்றது. மேலும் ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.